Tamil:
சக்தி – call your M.P. campaign உங்கள் M.P.யுடன் தொடர்பு கொள் என்ற டிசெம்பர் 27 ந்தேதி மாலை 7 மணி முதல் 9.30 வரையிலான பிரச்சார த்திற்கான draft அல்லது மாதிரி வடிவம்.
அவர் தொலைபேசி யை எடுத்தவுடன் நீங்கள் என்ன பேச வேண்டும் என்பதற்கு இது உதவும் .
Hello M.P. என்றும் அவர் பெயருடன் திரு அல்லது திருமதியை இணைத்து வணக்கம் தெரிவிக்கவும்.
அடுத்து உங்கள் பெயரை ச் சொல்லி அறிமுகப்படுத்தி க்கொண்டு சக்தி -call your M.P. campaign என்ற நாடு தழுவிய பிரச்சார த்திற்காகக் கூப்பிடுகிறேன் என்று சொல்லவும்.
அவர் உங்களுக்கு பதில் அளித்ததும்
நாங்கள் உங்களை தாழ்மையுடன் வேண்டுவதெல்லாம் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை வருகிற பாராளுமன்ற கூட்டத் தொடரில் விவாதத்திற்கு எடுத்துக்கொண்டு அதனை சட்டமாக்க வேண்டும் என்பது தான். கடந்த 70 ஆண்டுகளாக வெறும் 10 சதவீத பெண்களே பாராளுமன்ற அங்கத்தினர் என்பது உங்களுக்கு நன்கு தெரியும் .
எங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரதிநிதியான உங்களை பாராளுமன்றத்தில் இந்த கோரிக்கையை முன் வைக்குமாறு கேட்கிறேன்
எங்களுடைய தேவையெல்லாம் இந்த சட்டத்தை இந்த கூட்டத் தொடரில் அமல்படுத்துங்கள் என்பதுதான் . இதை நீங்கள் செய்வீர்களா?
ஆமாம் /இல்லை என்ற பதிலுக்குக் காத்திருக்கவும். பின்னர் அவரிடம்
“உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கியதற்கும். நீங்கள் இதைச் செய்வீர்கள் என்பதற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் . நன்றி
இந்த கேள்விக்கான எம்பியுடைய ஆமாம் அல்லது இல்லை என்ற பதிலைக் குறித்துக்கொண்டு WhatsApp or SMS மூலம் கீழ் கண்ட நம்பருக்கு அனுப்பவும்
முதலில் எம்பியின் பெயர்
அவரது பதில் (ஆமாம் /இல்லை)
நீங்கள் அனுப்ப வேண்டிய நம்பர் 93419 41945